Tumgik
Text
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது, அதுவும் அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயன கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதற்காக பலர் அழகு நிலையத்திற்கு செல்கின்றனர்.
இருப்பினும் சருமத்தில் தோன்றும் பருக்கள், கருவளையங்கள் (dark circles), முகசுருக்கங்கள், கரும்புள்ளிகள் (dark circles) ஆகியவை நீங்குவதற்கு நாம் அன்றாடப்பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மிகவும் உதவுகிறது.
சருமத்தில் தோன்றும் சில பிரச்சனைகளை சரி செய்வதற்கு டூத் பேஸ்ட் ஒரு சிறந்த அழகு பராமரிப்பு பொருளாக விளங்குகிறது.
கரும்புள்ளி
சிலருக்கு சருமத்தில் அதிகளவு கரும்புள்ளிகள் தோன்றும், அவற்றை சரி செய்வதற்கு டூத் பேஸ்ட் ஒரு சிறந்த பொருளாக பயன்படுகிறது.
சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறைய ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த கலவை முகத்தில் தடவி ஒரு பேக்காக போடுங்கள் பின்பு 1/2 மணி நேரம் வரை வைத்திருந்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று இரண்டு மாதங்கள் வரை செய்து வர சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறைந்து விடும். 
முகப்பருக்களுக்கு மற்றும் கரும்வளையத்திற்கு (dark circles):
பலருக்கு இருக்கின்ற ஒரு தொல்லைதான் இந்த முகப்பரு பிரச்சனை. இவற்றை சரி செய்வதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின்பு இந்த கலவையை சருமத்தில் தடவி சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும் பின்பு 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் ஒருமுறை என்று இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து செய்து வர சருமத்தில் தோன்றும் பருக்கள் மறையும். மேலும் கருவளையங்கள் (dark circles) மறையும். 
முகத்தில் தோன்றும் கருத்திட்டுகளுக்கு (DARK CIRCLES):
சிலருக்கு சருமத்தில் அதிகளவு கருத்திட்டுகள் தோன்றும், அவற்றை சரி செய்ய ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட், சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த கலவையை சருமத்தில் தடவி 1/2 மணி நேரம் வரை வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.
இந்த முறை வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமத்தில் தோன்றும் கருத்திட்டுகள் மறைந்து, சருமம் பொலிவு பெரும். 
முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீங்க:
சிலருக்கு முகத்தில் தேவையற்ற இடத்தில் முடிகள் இருக்கும். அந்த முடிகள் உதிர்வதற்கு ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் எடுத்து கொள்ளுங்கள்.
பின்பு அவற்றில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் தடவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்து விடும். சருமமும் ஜொலிஜொலிக்கும்.
0 notes
Text
முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது? 
Turmeric benefits for skin..!
மு��� கரும்புள்ளி நீங்க  Turmeric benefits for skin: – 
தற்போதைய மோசமான காலநிலையால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதாவது குறிப்பாக வெயில் கொளுத்துவதால், பலருக்கு சருமம் கருமையாகிவிடுகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ வழிகள் உள்ளன.
மேலும் நம் சமையலறையில் உள்ள பல பொருட்களும் சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கும் தன்மை கொண்டது அந்த வகையில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக இதை TRY பண்ணுங்க..!
முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் தயிர் 
 சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க மஞ்சள் ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. ஒரு ஸ்பூன் தயிருடன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவுங்கள். இந்த முறையை தினமும் செய்து வர முக கருமை நீங்கி முகம் ஜொலிஜொலிக்கும்.
முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் கற்றாழை 
 சிலபேருக்கு முகம், கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் மிகவும் கருமையாக இருக்கும். அவற்றில் இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள் அதாவது ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன், இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து முகம், கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யங்கள்.
பின் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கழுத்து கை, கால் போன்ற பகுதிகளில் உள்ள கருமைகள் அனைத்தும் மறைந்து விடும்.
முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் 
 முக கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமை நீங்க 1/2 டம்ளர் ரோஸ் வாட்டருடன். சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து ஒரு SPRAY பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி, முகத்தில் நன்றாக SPRAY செய்யுங்கள் இவ்வாறு முகத்தில் SPRAY செய்வதினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க ஆரம்பிக்கும் பின் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும். ஆனால் இந்த முறையை தினமும் மூன்று முறை பின்பற்ற வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள அழகு குறிப்பு டிப்ஸில் ஏதேனும் ஒரு டிப்ஸை தொடர்ந்து பாலோ செய்து வர முக கரும்புள்ளி நீங்க ஆரம்பிக்கும்.
1 note · View note